நள்ளிரவில் கதறிய இளம்பெண்; பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் - பதறவைக்கும் வீடியோ!
இளம்பெண்ணை 5 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், பாரிஸ் அருகே உள்ள வடக்கு பிகாலி மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள மதுபான விடுதி மற்றும் கிளப்புக்கு சென்றுள்ளார்.
அதன்பின், நள்ளிரவு 12 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்துள்ளார். இந்த வேளையில் 5 பேர் அந்த பெண்ணை சூழ்ந்து கொண்டு தனியாக வரும்படி கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அந்த பெண்ணை தனியாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிய இளம்பெண் ஆடைகள் கிழிந்த நிலையில் காலை 5 மணிக்கு அருகே உள்ள கபாப் கடைக்குள் சென்று உதவி கோரியுள்ளார்.
Paris was the City of Love.
— ???? ???? ♛ ✡︎ (@NiohBerg) July 23, 2024
It's now become the City of Gangrape. pic.twitter.com/w93TP4ab1C
இதுகுறித்து தகவலறிந்து விரைந்த போலீஸார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர்கள் பார்க்க ஆப்பிரிக்கர்கள் போன்று தோன்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்து காபாப் கடையில் அந்த பெண் தஞ்சமடைந்ததும்,
அப்போது கும்பலை சேர்ந்த ஒருநபர் அங்கு வந்ததும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த காட்சியை வைத்து போலீசார் பாலியல் பன்கொடுமை செய்த கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.