எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மக்களே : மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்

vaccine Australia Scott Morrison
By Irumporai Jul 23, 2021 10:20 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாம2தத்திற்கு பொது மக்களிடம் ஆஸ்திரேலிய பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பத்தில் தீவிரப்படுத்தியது. ஆனால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நாட்டின் முக்கியமான சில இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆஸ்திரேலிய பிரதமரிடம் நாட்டு மக்கள் தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் எத்தனை சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று சில திட்டமிடல்களை நாங்கள் வகுத்தோம்.

ஆனால் இப்போது அதை எங்களால் எட்ட முடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை நானே அனைத்து பொறுப்புகளையும் நேரடியாக ஏற்கிறேன். அதேபோல் தடுப்பூசி விநியோகப்படுத்துவதில் உருவாகும் சவால்களுக்கும் நானே பொறுப்பு ஏற்கிறேன்.

சில விஷயங்ள் இப்போது வரை நம் கட்டுக்குள் இருக்கிறது. சில விஷயங்கள் மட்டும் இல்லை. இருப்பினும் பொறுப்புகளை நான் ஏற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.