பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற ஆஸ்திரேலிய எம்.பி - என்ன காரணம்?
ஆஸ்திரேலியாவில் வருண் கோஷ் என்பவர் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வருண் கோஷ்
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் வருண் கோஷ். வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர் ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார்.
இதற்கிடையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேற்கு ஆஸ்திரேலியா தொகுதி எம்.பி.யாக இருந்த பாட்ரிக் டாட்சென், உடல் நலக்குறைவால் பதவியை ராஜினாமா செய்தார்.
சத்தியப்பிரமாணம்
இந்நிலையில் இத்தொகுதிக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி வருண் கோஷ் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து வருண் கோஷ் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
இதன் மூலம் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி என்ற பெருமையை வருண் கோஷ் பெற்றுள்ளார்.