ஷேன் வார்னே திடீர் மரணம் - கதறி அழும் ஆஸ்திரேலிய வீரர்கள்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் மறைவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள், இந்நாள் வீரர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு 15 வயதிலிருந்தே வார்னேவை நன்றாக தெரியும். நான் கிரிக்கெட் அகாடமியில் தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன். எனக்கு பண்டர் என்ற பட்ட பெயர் வைத்தவரும் அவர் தான். பல வருடங்களாக ஒரே அணியில் விளையாடி பல உச்சத்தையும், பல இன்னல்களையும் ஒன்றாக சந்தித்தோம் என கூறியுள்ளார்.
மேலும் எப்போதும் சக வீரர்களுக்காக துணை நிற்பவர். அவரை எப்போதுமே நீங்கள் நம்பலாம். நமக்கு தேவைப்படும் போது எல்லாம் முதல் ஆளாக வந்து நிற்பவர். சிறந்த கிரிக்கெட் வீரருடன் விளையாடி இருக்கிறேன் என்ற பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னாள் வீரர் மெக்ராத், வார்னேவின் மறைவு மனதை நொறுக்கிவிட்டது. அவருக்கு ஏதும் நடக்காது என்று நம்பிகையுடன் இருந்தேன். பல மனிதர்கள் 20 வயதில் வாழ்ந்த வாழ்க்கையை விட அவர் அதிகமாக வாழ்ந்தார். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த ஜாம்பவான். தோல்வியை ஒப்பு கொள்ளாதவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மற்றொரு வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் ன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த விசயமே அவரது பந்துவீச்சுக்கு விக்கெட் கீப்பராக இருந்தது தான் என தெரிவித்துள்ளார்.