கிரிக்கெட் போட்டியில் விபரீதம் - பேட்ஸ்மேன் அடித்த பந்தால் கொடூரமாக மாறிய நடுவரின் முகம்
பேட்ஸ்மேன் அடித்த பந்தால் நடுவரின் முகம் கொடூரமாக மாறியுள்ளது.
கிரிக்கெட் போட்டி
மேற்கு ஆஸ்திரேலிய புறநகர் டர்ஃப் கிரிக்கெட் சங்கம் சார்பில் நார்த் பெர்த் மற்றும் வெம்ப்லி மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை(20.11.2024) நடைபெற்றது.
இந்த போட்டியின் நடுவராக டோனி டிநொப்ரேகா(tony de nobrega) பணியாற்றினார். போட்டியின் போது பேட்ஸ்மேன் நேராக அடித்த பந்து, நடுவர் டோனியின் முகத்தில் தாக்கியது.
காயமடைந்த நடுவர்
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நடுவர் டோனி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முகத்தில் எலும்பு முறிவு ஏற்படாததால் அறுவை சிகிச்சை தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவரின் முகத்தின் வலது பக்கத்தில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. நடுவர் டோனி விரைவில் குணமடைந்து வருமாறு மேற்கு ஆஸ்திரேலியா புறநகர் கிரிக்கெட் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பேட்ஸ்மேன் அடித்த பந்தால் நடுவர் காயமடைவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் பந்து தலையில் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.