இந்தூர் டெஸ்ட் போட்டி - இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி...!

Cricket Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini Mar 03, 2023 06:58 AM GMT
Report

இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே இந்தியா அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்து ஆல் ஆவுட்டானது. இதன் பின் ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது.

இதில் கடைசி 11 ரன்னுக்கு அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து, 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா மீண்டும் திணறியது.

இப்போட்டியின் முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று களத்தில் இறங்கியது. இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.

australia-win-to-cricket-indore