ஆஸ்திரேலியா நாட்டில் மீண்டும் காட்டு தீ: வீடுகள்,மரங்கள் எரிந்து நாசமாகின
ஆஸ்திரேலியா நாட்டில் மீண்டும் காட்டு தீயால் பெர்த் நாக்ரில் உள்ள பல்வேறு வீடுகள் மற்றும் பல லட்ச மரங்கள் எரிந்து சாம்பலாகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடகிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருகிறது.
இதனால் அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். தீயை அணைக்க 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் இந்த காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ வேகமாக பரவுதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.