டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு All Out

Cricket Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini Mar 02, 2023 06:49 AM GMT
Report

இந்தூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் இன்னிங்சில் சுருண்டு விழுந்த இந்தியா - All Out

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் ரோகித் சர்மா, சுக்மன் கில், புஜாரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். இப்போட்டியின் இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்து ஆல் ஆவுட்டானது.ஹ

australia-to-197-all-out-cricket-indore

ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு - All Out

இதனையடுத்து களங்கிய ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி உமேஷ் யாதவின் வேகத்திலும், அஸ்வின் சுழலிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி தனது 2ம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.