2-வது டெஸ்டில் தோல்வி - திடீரென நாடு திரும்பிய ஆஸ்தி.கேப்டன் பேட் கும்மின்ஸ்...!
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கும்மின்ஸ் அவசர அவசரமாக தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
திடீரென நாடு திரும்பிய கேப்டன் பேட் கும்மின்ஸ்
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கும்மின்ஸ் திடீரென்று தனது சொந்த நாட்டுக்கு திரும்பி இருக்கிறார்.
சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க இருக்கிறார். அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர நோய் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவிற்கு அவசர அவசரமாக சென்றுள்ளார்.
எனினும், 3-வது டெஸ்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ம் தேதி இந்தூர் நகரில் நடைபெற உள்ளது. அவர் வரவில்லை என்றால், துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்தி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australia's Test captain Pat Cummins has flown home for personal reasons due to a serious family illness.
— ABC SPORT (@abcsport) February 20, 2023
He will return to India later this week to re-join preparations for the third Test in Indore.#INDvAUS #cricket pic.twitter.com/ERz4M4t4kK
Pat Cummins returns to Australia due to personal reasons.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2023
If he doesn't return on time for the 3rd Test, Steven Smith might captain the team.
Australia Test captain Pat Cummins will return home due to a family illness.#INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/5RpN4YzsyB
— Doordarshan Sports (@ddsportschannel) February 20, 2023