ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா சாம்பியன்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் நவோமி ஒசாகா. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதிஇன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் - அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும் மோதினர்.
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நவோமி ஒசாகா தொடக்கத்தில் இருந்தே தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார்.
முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய நவோமி ஒசாகா, தன்னுடைய இரண்டாவது செட்டை 6-3 என்று வென்று ஜெனிபர் பிராடியை நேர் செட்டில் தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.