டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி
டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் இன்று மோதின.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது.
பந்துவீசிய 5 ஆஸி. வீரர்களும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது எடுத்தார்கள். ஹேசில்வுட், ஸ்டார்க், ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 35, மேக்ஸ்வெல் 18, மேத்யூ வேட் 17 ரன்கள் எடுத்தனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
