கொரோனா டெஸ்ட் எடுத்தால் பீட்சா இலவசம்! அதிரடி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் கொரோனா டெஸ்ட் எடுப்பவர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சிப்லே பார்க் பகுதியில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் அங்கு பரிசோதனை செய்து கொள்ள நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மக்களுக்காக தன் உணவகத்தில் பீட்சா தயார் செய்து அதை மற்றவர்களுடன் சேர் செய்தார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஜெலன் மெஸாய் கூறும் போது : "நான் இது குறித்து திட்டமிடவேயில்லை. நான் எதிர்ச்சியாக தான் மக்கள் வரிசையில் குளிரில் கொரோனா சோதனைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
எனக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என தோன்றியது. அதனால் அவர்களுக்கு ஆளுக்கு ஒரு சிலைஸ் கொடுத்தோம்.என கூறினார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.