‘’ நீங்க தோற்றால் 150 கோடி ,பாகிஸ்தான் கேப்டன் பேரம் பேசினார் ‘’ - ஆஸி.வீரர் பரபரப்பு புகார்

matchfixing australiaspinner
By Irumporai Jan 09, 2022 11:58 AM GMT
Report

அமேசான் பிரைமில் Shane என்ற டாக்குமெண்டரி உருவாகி வருகிறது. இதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை குறித்து வார்னே பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் 1994ஆம் ஆண்டு தமக்கு கிடைத்த மோசமான மேட்ச் பிக்சிங் அனுபவத்தை வார்னே பகிர்ந்துள்ளார்

1994ஆம் அண்டு கராச்சி டெஸ்டில் நான்காம் நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் என்னை ஹோட்டலில் வந்து பார்க்கும்படி அழைத்தார்.

அந்த ஆட்டத்தில் இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆட்டம் முடிந்ததும் நானும் சலீம் மாலிக்கை சந்தித்தேன் 

அப்போது, என்னை அவரது அறைக்கு உள்ளே அழைத்து சென்று இந்தப் போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். அதன் பின் அவர் பேசிய வார்த்தைகள் அதிர்ச்சி அளித்தன.

பாகிஸ்தான் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் எங்களது வீட்டையும், உறவினர்கள் வீட்டையும் எரித்து விடுவார்கள் என்று சலிம் மாலிக் கூறினார்

இதனால், கடைசி நாள் ஆட்டத்தில், நீங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பந்துவீச கூடாது. இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசினார்.

ஆனால் நான் அவரை திட்டிவிட்டு வந்துவிட்டேன் என்று வார்னே கூறினார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றாலும் வார்னே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, பின்னர் 2000ஆம் அண்டு சலீம் மாலிக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.