முக்கிய வீரர்களுக்கே இடம் இல்லை : ஆஸ்திரேலியா அணியின் அதிரடி முடிவு

AUS vs WI AUS vs BAN
By Petchi Avudaiappan Jun 17, 2021 09:29 AM GMT
Report

 மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள், வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 18 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலில் டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய 6 வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அதேசமயம் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, டேன் கிரிஸ்டியன், ஹசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், ஆண்ட்ரியூ டை, ஆடம் ஜாம்பா போன்ற பல சீனியர் வீரர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.