ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளிலிருந்து ராணி 2ம் எலிசபெத்தின் உருவப்படம் நீக்கம்...!
ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளிலிருந்து ராணி 2ம் எலிசபெத்தின் உருவப்படம் நீக்கப்படும் என்று அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கரன்சியில் 2ம் எலிசபெத்தின் உருவம் நீக்கம்
ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஆஸ்திரேலியாவின் $5 கரன்சி நோட்டிலிருந்து ராணி 2ம் எலிசபெத்தின் உருவப்படத்தை ஆஸ்திரேலியா அகற்றும் என்று அந்நாட்டு மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.
மேலும், மறைந்த பிரிட்டிஷ் ராணிக்குப் பதிலாக, ஆஸ்திரேலியாவின் பழங்குடி கலாச்சாரத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் மற்றும் கௌரவிக்க ஒரு புதிய வடிவமைப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி அரசாங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ராணி 2ம் எலிசபெத்தின் மரணம் ஆஸ்திரேலியாவில் அரசியலமைப்பு முடியாட்சியாக அதன் எதிர்காலம் பற்றிய விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
மேலும், கரன்சி நோட்டுகளிலிருந்து இங்கிலாந்து அரசர் 3ம் சார்லசின் உருவங்களை நீக்குவது என்ற முடிவை எடுத்துள்ளது.
