உங்களுக்கு ஒரு நியாயம், மத்தவுங்களுக்கு ஒரு நியாயமாடா? ஆஸ்திரேலிய அணி மீது கவுதம் கம்பீர் ஆவேசம்

Gautam Gambhir angry tweet australia team
By Anupriyamkumaresan Nov 13, 2021 10:20 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது மைதானத்தில் இரண்டு பிட்ச்சாகி வந்த பந்தை சிக்ஸர் விளாசிய டேவிட் வார்னரை முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

உங்களுக்கு ஒரு நியாயம், மத்தவுங்களுக்கு ஒரு நியாயமாடா? ஆஸ்திரேலிய அணி மீது கவுதம் கம்பீர் ஆவேசம் | Australia Match Gautham Kambeer Angry Tweet

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களும், ஃப்கர் ஜமான் 55* ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (0), மிட்செல் மார்ஸ் (28), ஸ்டீவ் ஸ்மித் (5), மேக்ஸ்வெல் (7) என முக்கிய வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தனர். நீண்ட நேரம் தாக்குபிடித்த டேவிட் வார்னரும் 49 ரன்கள் எடுத்திருந்த போது தனது கவனக்குறைவால வெளியேறினார்.

இந்த தொடர் முழுவதும் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக திகழ்ந்த ஷாகின் அப்ரிடியின் பந்தை அசால்டாக துவம்சம் செய்து ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய மேத்யூ வேட் 19வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்று கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

 ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியை போலவே, இந்த போட்டியில் டேவிட் வார்னர் அவுட்டான விதமும், இரண்டு பிட்ச்சாகி வந்த பந்தில் டேவிட் வார்னர் அடித்த சிக்ஸரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில், இது குறித்து முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “வார்னரின் ஷாட் ஆட்டத்தின் ஸ்பிரிட்டை மீறிய செயல் என்று விமர்சித்தார். பவுலர் பந்தை வீசவேயில்லை; பவுலரின் கையிலிருந்து தவறிவந்த பந்தை சிக்ஸருக்கு அடித்த வார்னரின் செயல் வெட்கக்கேடானது என்று விமர்சித்த கம்பீர், இதுதொடர்பாக என்ன சொல்கிறீர்கள் அஷ்வின் என கேள்வியெழுப்பியிருந்தார்.

ஐபிஎல்லில் அஷ்வின் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அஷ்வின் செய்த ரன் அவுட், ஐசிசி விதிப்படி சரியானதுதான் என்றாலும், ஆட்ட ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் விமர்சித்திருந்தனர். அதை சுட்டிக்காட்டிய கம்பீர், இப்போது எங்கே போனார்கள்.

உங்களுக்கு ஒரு நியாயம், மத்தவுங்களுக்கு ஒரு நியாயமாடா? ஆஸ்திரேலிய அணி மீது கவுதம் கம்பீர் ஆவேசம் | Australia Match Gautham Kambeer Angry Tweet

மற்ற நாட்டு வீரர்கள் மன்கட் செய்தால் வரிந்துகட்டிக்கொண்டு வருவது எளிது. அதே தங்கள் சொந்த நாட்டு வீரர்கள் செய்தால் நீங்கள் எதுவும் பேசமாட்டீர்கள் என்று நறுக் நறுக் என கேள்வியெழுப்பினார் கவுதம் கம்பீர். 

கவுதம் கம்பீரின் கருத்து தவறானது என்று ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் டுவீட் செய்ய, அதற்கு அஷ்வின் தானாக முன்வந்து விளக்கமளித்தார். அதாவது, கம்பீர் என்ன சொல்கிறார் என்றால், அது(மன்கட் ரன் அவுட்) சரி என்றால் இதுவும்(வார்னர் அடித்த ஷாட்) சரி.. அது தவறென்றால் இதுவும் என்றால் இதுவும் தவறுதான் என்கிறார் கம்பீர்.. கம்பீரின் பார்வை சரியானதுதான் என்று அஷ்வின் விளக்கமளித்தார்.