இந்தியா மீது இருந்த தீராக்காதல் - ஆஸ்திரேலிய முதியவரின் உயிலில் இருந்த நெகிழ்ச்சியான விஷயம்

Australia India Bihar
By Karthikraja Feb 25, 2025 08:30 AM GMT
Report

 ஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவரின் உயிலில் இருந்த ஆசை நிறைவேற்றபட்டுள்ளது.

ஆஸ்திரேலிய முதியவர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டொனால்ட் சாம்ஸ்(91), ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

australia man donald sams

இவரது தந்தை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது அசாம் மாநிலத்தில் பணியாற்றியுள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா வரும்போதெல்லாம், அசாம் செல்வதை சாம்ஸ் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழப்பு

ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு வரும் போதும், சாம்ஸ் கொல்கத்தாவிலிருந்து கங்கை வழியாக பாட்னாவிற்கு கப்பலில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதே போல் 12 வது முறையாக இந்தியா வந்துள்ள அவர், 42 பேர் கொண்டு ஆஸ்திரேலியா குழுவுடன் கப்பலில் பயணம் செய்துள்ளார். 

australia man donald sams

அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், முங்கரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

உயிலில் இருந்த விஷயம்

அவரது இறப்பு குறித்து ஆஸ்திரேலிய தூதரகம் மற்றும் அவரது மனைவி ஆலிஸ் சாம்ஸின் தகவல் அளிக்கப்பட்டது. அவருக்கு இந்தியா மீது இருந்த தீராத காதல் காரணமாக தனது உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார். எனவே அவரது உடலை இந்தியாவில் அடக்கம் செய்யுமாறு ஆஸ்திரேலியா தூதரகம் மூலமாக அவரது மனைவி கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று, கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்குகளை பாதிரியார் செய்த பின், முங்கர் நகரின் சுரம்பா பகுதியில் உள்ள கிறிஸ்தவ இடுகாட்டில் டொனால்ட் சாம்ஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா முதியவருக்கு இந்தியா மீது இருந்த காதல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.