திடீரென ரஜினி வீட்டிற்கு சென்ற ஆஸ்திரேலிய துணை தூதர் - என்ன காரணம்?
பிரபல முன்னணி நடிகரான ரஜினிகாந்த் வீட்டிற்கு ஆஸ்திரேலிய துணை தூதர் திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

அது வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.
துணை தூதர்
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் துணை தூதர் பேர்ரி ஓ ஃபேரல் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கலாச்சாரத்தையும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நட்பை இணைக்கிறது சினிமா. புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.

அவர் நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்காக வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் ரஜினிகாந்தின் ரசிகர் என்றும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil