கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா..காரணம் என்ன?
ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் 51 வயதான ஜஸ்டின் லாங்கர்.
அண்மையில் நடந்து முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வந்த ஆஸ்திரேலியா அணியை மீட்டெடுத்தார் ஜஸ்டின் லாங்கர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தனது தலைமை பயிற்சியாளர் பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவரின் ராஜினாமா கடித்தத்தை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவரை உடனடியாக விடுவிப்பதாக அறிவித்தது.
கிரிக்கெட் வாரியத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்களெ் வெளியாகியுள்ளன.