இவர்களுக்கு யூடியூப் சேனல் நடத்த தடை - உலகில் முதல்முறை..

Youtube Australia
By Sumathi Aug 02, 2025 11:58 AM GMT
Report

சமூகவலைத்தளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

யூடியூப்-க்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக் டாக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Youtube

இந்நிலையில், இந்த தடைப் பட்டியலில் தற்போது யூடியூப்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இனி யூடியூபில் கணக்கு வைத்திருப்பவர்கள் 16 வயது கடந்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். இந்த சட்டம் வரும் டிசம்பர் முதல் அமலுக்கு வரவுள்ளது.

75 வயது நபருடன் காதல் - எல்லையில்லா இன்பத்தை தருவதாக 25 வயது காதலி நெகிழ்ச்சி!

75 வயது நபருடன் காதல் - எல்லையில்லா இன்பத்தை தருவதாக 25 வயது காதலி நெகிழ்ச்சி!

அரசு எச்சரிக்கை

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் தளம் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது பயனர்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றவோ, கருத்து தெரிவிக்கவோ அனுமதிக்காது.

இவர்களுக்கு யூடியூப் சேனல் நடத்த தடை - உலகில் முதல்முறை.. | Australia Bans Children Running Youtube Channels

இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு வயது சரிபார்ப்பு முறைகளை கடுமையாக்குவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மீறினால், நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தம், தனிமை, மற்றும் ஆன்லைன் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இந்தத் தடை, பெற்றோர்களுக்கு ஆதரவாகவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.