ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியா கேப்டன் - ரசிகர்கள் அதிர்ச்சி

Cricket Aaron Finch Australia Cricket Team
By Sumathi 1 மாதம் முன்
Report

ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆரோன் ஃபின்ச்

2021 இல் ஆஸ்திரேலியாவை டி20 உலகக் கோப்பை போட்டியில் வழிநடத்தி கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தவர் ஃபின்ச். 36 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்காக ஐந்து டெஸ்ட், 146 ODIகள் மற்றும் 103 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியா கேப்டன் - ரசிகர்கள் அதிர்ச்சி | Australia Aaron Finch Retire International Cricket

டி20 அணிக்காக நீண்டகாலம் கேப்டனாக செயல்பட்டவர். இவர் கடந்த ஆண்டே ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை அணிக்காக பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையும் பெற்றுள்ளார்.

ஓய்வு

பிக் பாஷ் லீக்கில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ள இவரது தலைமையிலான அணி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றை கூட தாண்டாதது விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக்கில் ஃபின்ச் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.