அதிரடி ஆட்டத்தால் டி.20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிக் கொள்ளும் இறுதி ஆட்டம் துபையில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
ஜிம்மி நீஷம் 13, டிம் செய்பெர்ட் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆடம் ஷம்பா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து மிட்சேல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி அதிரடி காட்டியது.
3 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் விளாசியிருந்த வார்னர் 38 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணியின் டிரென்ட் பெளல்ட் கேட்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக அதிரடி காட்டிய மிட்சேல் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என விளாசி தள்ளினார்.
அவருக்கு சரியான இணையாக களத்தில் இருந்த கிளென் மாக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.
18ஆவது ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றிருக்கிறது.
மேக்ஸ்வெல் 28 ரன்களுடனும், மார்செல் 77 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.