விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வார்னர் - இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா 35, சரித் அசலங்கா 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் , மிட்சில் ஸ்டார்க், ஆடம் சாம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டேவிட் வார்னர் 65, கேப்டன் ஆரோன் பின்ச் 37 ரன்களும் விளாச 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
