போராடி ஜெயித்த ஆஸ்திரேலியா... விட்டுக்கொடுக்காத வங்கதேசம்...

AUSvsBAN 4tht20match
By Petchi Avudaiappan Aug 07, 2021 05:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 வங்கதேசம் அணிக்கு எதிரான 4வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் வங்கதேச அணி வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போராடி ஜெயித்த ஆஸ்திரேலியா... விட்டுக்கொடுக்காத வங்கதேசம்... | Aus Beat Bangladesh By 3 Wickets

இதனிடையே இன்று 4வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கியவர்களில் முகம்மது நைம் அதிகப்பட்சமாக 28 ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆண்ட்ரூ டை, ,மிட்செல் ஸ்வெப்சன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 105 ரன்கள் எடுத்தால் ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேன் கிறிஸ்டியன் அதிரடி காட்டி 39 ரன்கள் விளாச 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியா நிம்மதி பெருமூச்சு விட்டது. இதனைத் தொடர்ந்து 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.