புதுமண தம்பதிகளே கவனீங்க..இந்த மாதம் 2 கருட சேவை - என்ன பலன்கள்!
புதுமண தம்பதிகள் கருட சேவையை தரிசனம் செய்வதற்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கருட சேவை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கருட சேவை தரிசனம் இந்த மாதம் 2 முறை வருகிறது. அதனை முன்னிட்டு உடனே தரிசனத்திற்கு டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புதுமண தம்பதிகள்
ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடன் மீது திருமாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார்.
19ஆம் தேதி ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
இதில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு கருடனை போல் வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.