ரூ.2 லட்சத்தை நோக்கி தங்கம் விலை : இன்றைய நிலவரம்

Silver Gold
By Vinoja Aug 16, 2026 05:55 AM GMT
Report

தங்கம் விலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நகை வாங்குவோர் மத்தியில் விலை குறித்த எதிர்பார்ப்பும், கவலையும் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்று தங்கம் விலை இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் விலை குறைந்த நிலையில், மாலையில் அதிரடியாக உயர்ந்தது.

ரூ.2 லட்சத்தை நோக்கி தங்கம் விலை : இன்றைய நிலவரம் | August 15Th 2026 Gold And Silver Price In Chennai

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்!

ஒருநாள் ரெமோ மறுநாள் அந்நியன்... நரக வேதனை : காதல் குறித்து அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்!

நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,200க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.2 லட்சத்தை நோக்கி தங்கம் விலை : இன்றைய நிலவரம் | August 15Th 2026 Gold And Silver Price In Chennai

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்கம் விலை தடாலடி சரிவு ...இன்று சவரன் எவ்வளவு?

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்கம் விலை தடாலடி சரிவு ...இன்று சவரன் எவ்வளவு?

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,000க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.2 லட்சத்தை நோக்கி தங்கம் விலை : இன்றைய நிலவரம் | August 15Th 2026 Gold And Silver Price In Chennai

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எதிர்காலத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW