இனி ஸ்கேன் பண்ணா போதும் - முதலமைச்சரே விளக்கம் கொடுப்பாரு...!! அரசின் அசத்தல் முயற்சி..!
புதிய முயற்சி
உலகம் நவீன மயமாகி வரும் சூழலில், தொடர்ந்து பல தொழில், செயல்பாடுகளில் அது புது புது விஷயங்களை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றது.
அப்படி தான் தற்போது தமிழ்நாடு அரசும் இந்த நவீன் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டுள்ளது.அரசின் திட்டங்களை எளிதில் மக்களிடம் கொண்டு செல்ல இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
MKSinAR
அதாவது செய்தி நாளிதழ்களில் வெளியாகும் அரசின் திட்டங்கள் குறித்து வெளியாகும் விளம்பரங்களில் அதனுடன் சேர்த்து QR code ஒன்றும் இணைக்கப்படுகிறது.
#MKSinAR pic.twitter.com/IReGfVrwo8
— எஸ்.ரகுபதி (@regupathymla) February 1, 2024
அந்த QR code'ஐ ஸ்கேன் செய்தால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின், தோன்றி அந்த திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பார்.
இது augumented reality என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.