பெரியார் வக்கிரமானவர்; அவரை நேரடியாக எதிர்த்த சீமானுக்கு பாராட்டு - குருமூர்த்தி

Tamil nadu Seeman
By Sumathi Jan 15, 2025 02:57 AM GMT
Report

ஆடிட்டர் குருமூர்த்தி சீமான் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சீமான் பேச்சு 

துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், சீமானுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது.

guru murthy - seeman

ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைத்தவர் சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக் கொண்டு இருக்கிறார்.

குருமூர்த்து ஆதரவு 

இது தமிழ்நாட்டிற்கு நல்லது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில், பாஜக கொண்டு வருகிறது என்பதற்காகவே அதற்கு எதிர்ப்பு தேவைப்படுகிறது.

பெரியார் வக்கிரமானவர்; அவரை நேரடியாக எதிர்த்த சீமானுக்கு பாராட்டு - குருமூர்த்தி | Auditor Gurumurthy About Seeman Periyar

இந்த நாட்டில் 1967ம் ஆண்டு வரை ஒரே தேர்தல் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தனியாக தேர்தல் நடத்தக்கூடாது. அதற்கு செலவாகும். எனவே, ஒட்டுமொத்த தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியதே கருணாநிதி தான்.

அதெல்லாம் மக்களுக்கு மறந்துவிட்டது.ஒரு புதிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் எதிர்க்கிறார்கள். இது சாத்தியமா? இல்லையா? என்பதை இப்போதைக்கு கூற முடியாது என தெரிவித்துள்ளார்.