குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை : விளக்கம் கொடுத்த அமைச்சர்

DMK Ma. Subramanian
By Irumporai May 31, 2023 07:32 AM GMT
Report

தீட்சிதர் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

குழந்தை திருமணம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா,சுப்பிரமணியன் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிள் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை. தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார். மருத்துவர்களிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை என கூறிவிட்டு, ஆளுநரை சந்தித்த பின் பரிசோதனை நடந்தாக கூறினார்.

குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை : விளக்கம் கொடுத்த அமைச்சர் | Audio Evidence Minister Condemns Child Commission

 அமைச்சர் விளக்கம்

பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருவிரல் பரிசோதனை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். இதனை டிஜிபி சைலேந்திரபாபு மறுத்து இருந்தார். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை தொடங்கியது. அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், பொது தீட்சிதர்கள் குடும்ப சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனையைச் செய்துள்ளனர்.

இதனை அவர்கள் மருத்துவ அறிக்கையிலேயே தெரிவித்தாக கூறியிருந்தார். ஆளுநர் கூறியது உண்மை தான். சிறுமிகளுக்குத் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தி நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிள் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.