வெள்ளப்பெருக்கில் மூழ்கியது நியூசிலாந்து சர்வதேச விமான நிலையம் - 2000 பேர் சிக்கித் தவிப்பு...!

Viral Video New Zealand
By Nandhini Jan 28, 2023 12:01 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வரலாறு காணாத கனமழையால் நியூசிலாந்து சர்வதேச விமான நிலையம் வெள்ள நீரில் மூழ்கியது.

வெள்ளப்பெருக்கில் மூழ்கிய சர்வதேச விமான நிலையம்

நியூசிலாந்து, ஆக்லாந்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்தில் 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை 246 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரமே வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளபெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

auckland-airport-flooded-new-zealand

2000 பேர் சிக்கித் தவிப்பு

இந்நிலையில், பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், நியூசிலாந்தின் ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ள நீரில் சுமார் 2,000 பேர் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.