ரஷ்யாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாகா அறிவித்த லாட்வியா
ரஷ்யாவினை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு என லாட்வியா அறிவித்துள்ளது.
முடிவுக்கு வராத போர்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தற்போது வரை போரினை முடிவுக்கு கொண்டுவரவில்லை ,ரஷ்யாவின் மீது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்த நிலையில் லாட்வியா லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் ரஷியாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக அறிவித்துள்ளது.
பயங்கரவாத நாடாக அறிவித்த லாட்வியா
இது குறித்து லாட்விய வெளியிட்டுள்ள தகவலின் படி அரசியல் ரீதியாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்யா கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ரஷ்யாவின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, பொது மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு இணையானது. இதனால் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம் எனக் கூறியுள்ளது.
67 பேர் ஆதரவு
எங்களைப் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் இதனை அங்கீகரிக்க அழைப்பு விடுக்கிறோம். ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் மொத்தம் 100 பேர் கொண்ட லாட்வியா நாடாளுமன்ற அவையில் 67 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
16 பேர் வாக்களிக்கவில்லை, மீதி உள்ளவர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
லாட்வியா ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.