ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் திடீர் மாற்றத்தால் பரபரப்பு
சேலம் ஆத்தூர் தொகுதியில் ஜூவா ஸ்டாலினுக்கு பதில் கு.சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்று திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெறியிட்டிருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்த தேர்தல் முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கின்றன.
கூட்டணி கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்காக 173 தொகுதிகளுக்கும் திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்து திவீர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுக வேட்பாளர் பட்டியிலில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஜீவா ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சின்னதுரை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஜீவா ஸ்டாலின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது கு,சின்னதுரை ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.