‘’உங்க ,சண்டைய பிறகு பாத்துகலாம் முதல்ல மேட்ச பாருங்க ‘’ : விராட் கோலி, கங்குலியை சரமாரியாக விளாசிய முன்னாள் வீரர்

ganguly viratkholi kapildev
By Irumporai Dec 17, 2021 08:24 AM GMT
Report

டி20 கேப்டன்சிலிருந்து விராட் கோலி விலகியபோது அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .

இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார் ,இதற்கு முன்பாக அவர் டி20 கேப்டன்சிலிருந்து விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி,' விராட் கோலி பதவியிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டோம் 'என கூறினார் .

இதுகுறித்து விராட் கோலி கூறும்போது," பிசிசிஐ சார்பில் யாரும் என்னை தொடர்பு கொண்டு பேச வில்லை "என கூறியிருந்தார். இதனால் விராட் கோலி -கங்குலிக்கு இடையே மோதல் நிலவுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது: கங்குலி, விராட் கோலி இருவரும் பெரிய பதவியில் இருப்பவர்கள். அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி சண்டை போட்டுக்கொள்வது சரியல்ல .

இந்த பிரச்சனையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் .இப்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கவனம் செலுத்துங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.