Monday, Jun 23, 2025

''எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை '' - சைக்கிள் திருட்டும், தோற்றுப்போன திருடனும் , வைரல் வீடியோ

Man attempts to rob cycle Instagram video Watch viral Video
By Irumporai 4 years ago
Report

சைக்கிள் திருட்டு முயற்சியில் தோற்றுப்போன நபரைப் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.  பொதுவாக இன்ஸ்டகிராமில் வெளியாகும் வீடியோக்களில் சில ட்ரெண்டாகி இணையத்தில் ஹிட் அடிக்கும்

அந்த வகையில், தற்போது இன்ஸ்டகிராமில் வெளியாகியுள்ள வீடியோ பதிவில் இளைஞர் ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைவர். அந்த வீட்டின் கதவு திறந்தே இருந்ததால், வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருட நினைத்த நபர்.

தனது சொந்த சைக்கிளைப் போல், அந்த சைக்கிளை நகர்த்திச் செல்வார். அதற்குள் உரிமையாளர் பார்த்துவிட, கட்டிய லுங்கியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அந்த நபரை துரத்திச் செல்வார்.

https://www.instagram.com/tv/CWUyLWwjfo6/?utm_source=ig_web_copy_link

இடைப்பட்ட நேரத்தி என்ன நடந்தது என்று நாம் தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.  இந்த வீடியோ தான் தற்போது வைரல், இந்த வீடியோ இவ்வளவு பெரிய ஹிட்டடிக்கக் காரணம்  அந்த வீடியோ எடிட் செய்த நபர் அந்த வீடியோவுக்குப் பின்னணியாக கேஸோலினா பாடலை ஓடவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது