ரயில் முன் தற்கொலைக்காக நின்ற இளைஞன் - ஒரு நொடியில் பாய்ந்து காப்பாற்றிய காவலர் - திக் திக் வீடியோ வைரல்

young-man attempted-suicide இளைஞன் வைரல்-வீடியோ rescued-guard தற்கொலை-முயற்சி காவலர்
By Nandhini Mar 24, 2022 10:45 AM GMT
Report

நேற்று மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் 18 வயது கொண்ட இளைஞன் ஒருவன் நின்றுக்கொண்டிருந்தான்.

அப்போது, எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ரயில் அருகில் வந்த சமயத்தில் அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் ஓடிச் சென்று நின்றான். 

அப்போது, உடனே இதைப் பார்த்த (ஜிஆர்பி) பிரிவு ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே உடனே மின்னல் வேகத்தில் பாய்ந்து, ஒரு நொடியில் அந்த இளைஞனின் உயிரை காப்பாற்றினார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞனின் உயிரை காப்பாற்றிய கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ்ஷிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.