நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி..!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
கடந்த 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
தற்போது இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சி வரும் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவை காட்டிலும் நிறைவு விழா மிக பிரமாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதற்காக வண்ணம் பூசும் பணி, மேடை அமைக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
காவலர் தற்கொலை முயற்சி
இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தன்னை தானே சுட்டுக் கொன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி உரிய விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.