காதலியின் உடலை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை ப்ரீஸரில் வைத்த காதலன் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை நகரின் பல இடங்களில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓல்ஹா டேவிடென்கோ
கடந்த 2019ம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்ற பிரபலமான திருமண ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வெற்றியாளராக தேர்வானவர்தான் ஓல்ஹா டேவிடென்கோ (39).
முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர் பீட்டர். இவருக்கும் ஓல்ஹாவிற்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் ரஷ்யா உக்ரைனில் போர் தொடுப்பதற்கு முன்பு உக்ரைனில் இவர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
கொடூரக் கொலை
சமீபத்தில் ஓல்ஹா டேவிடென்கோ திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசாருக்கு தகவல் செல்லவே, போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்தபோது, ஓல்ஹாவின் இதயம், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகங்கள் ப்ரீஸருக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கொல்லப்பட்ட பெண்ணின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் ஒரு பகுதி குளத்தில் வீசப்பட்ட சூட்கேஸ்ஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம்
இதனையடுத்து, பீட்டரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், எங்களுக்குள் சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நான் ஓல்ஹாவை கொலை செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பீட்டர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை நகரின் பல பாகங்களில் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.