மோசடி கும்பலிடம் சிக்கிய பிரபல நடிகை - அதிர வைக்கும் சம்பவம்
தனது சமூக வலைதளப் பக்கத்தை மோசடி கும்பல் ஒன்று நூதன முறையில் முடக்க முயற்சிப்பதாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சமூகத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி மோசடி செய்த கும்பல் தற்போது அதை நவீனப்படுத்தி விதவிதமாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அதன்படி சமூக வலைதளப் பக்கத்தில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்களை தொழில் போட்டி காரணமாகவும் ,மிரட்டி பணம் பறிப்பதற்காகவும் பல்வேறு முறைகளில் மோசடி செய்யும் கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் படங்களில் நடித்த பிரபல நடிகை ஷாலு ஷம்மு சிக்கியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியிட்டு அதன்மூலம் 6.5 லட்சம் ஃபாலோயர்களை அவர் கொண்டுள்ளார். இதனிடையே ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளார். அதில் தன்னிடம் மேக்கப் கலைஞராக பணிபுரிந்த உமா என்கிற நபர் இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொண்டு தனது ஃபேஸ்புக் கணக்கை புதிய மொபைலில் ஓபன் செய்ய முடியாத காரணத்தினால் இ-மெயில் அக்கவுண்டை இன்ஸ்டாகிராமில் இணைத்துக் கொள்ளுமாறு உதவி கேட்டதாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மெயிலை இணைத்துக்கொண்டு மொபைலுக்கு வரும் code யை அனுப்புமாறு ஷாலு ஷம்மு கேட்க, கடைசியில் நடந்த விசாரணையில் உமா இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை மோசடிக் கும்பல் ஹேக் செய்தது தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நண்பர்களும், தெரியாதவர்களும் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய உதவுமாறு கூறி தங்கள் மெயில் கணக்கை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்பவர்களை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
