தலைமுடியை நேராக்க முயற்சி: 12 வயது சிறுவன் பரிதாபமாக மரணம்

Kerala boy dead hair
By Jon Mar 26, 2021 02:20 PM GMT
Report

கேரளாவில் தலைமுடியை நேராக்க தீப்பெட்டியை வைத்து முயற்சித்த 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன், இவரது மகன் கிருஷ்ணா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

எப்போதும் யூடியூப் வீடியோக்களை பார்த்து அவற்றை முயற்சி செய்து வந்துள்ளான், சமீபத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தலையில் தீ வைக்கும் வீடியோவை பார்த்துள்ளான். இதைப்போன்று செய்ய ஆசைப்பட்ட கிருஷ்ணா, யாரும் இல்லாத நேரத்தில் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி முடியை நேராக்க தீப்பெட்டியை பயன்படுத்தியுள்ளார்.

இதில் தலையில் தீப்பற்றவே, வலியால் கதறித்துடித்துள்ளான் கிருஷ்ணா, அவனது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்துள்ளனர், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.