யானை தாக்கி பாகன் உயிரிழப்பு : முதுமலை முகாமில் பரபரப்பு

Elephant
By Irumporai Apr 28, 2023 05:28 AM GMT
Report

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானை ஒன்று தாக்கி அதன் பாகன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 முதுமலை தெப்பக்காடு

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி யானைக்கு வழக்கம்போல், காலை உணவு அளிக்க அருகே சென்ற போது, பாகனை திடீரென தாக்கியதில் சி.எம்.பாலன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கி பாகன் உயிரிழப்பு : முதுமலை முகாமில் பரபரப்பு | Attacked By An Elephant At Mudumalai Camp

  பாகன் உயிரிழப்பு

தற்போது, முகாமில் நடந்த இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2019-ல் சமயபுரம் கோவியிலில் இருந்த மசினி யானை, தனது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.