பூஜை போட்ட நேரம் சரியில்லையோ? இயக்குநர் பாலா படத்தில் நடிக்கும் நடிகை மீது தாக்குதல்..!

Suriya Tamil Cinema Tamil Nadu Police Bala
By Thahir Mar 21, 2023 08:00 AM GMT
Report

வணங்கான் படத்தில் நடித்து வரும் நடிகை மீது பட ஒருங்கிணைப்பாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா விலகல் 

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலா. இவர் தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்தில் பாலா மற்றும் சூர்யாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகியதாக அறிவிப்பு வெளியானது.

Attack on Vanagan film actress

தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.

இதில் கேரளாவைச் சேர்ந்த துணை நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜிதின் என்பவர் இருந்து வருகிறார்.

துணை நடிகை மீத தாக்குதல் 

இவர் துணை நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார். படப்பிடிப்பு 3 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சம்பளம் குறித்து துணை நடிகை லிண்டா என்பவர் ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் லிண்டாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

Attack on Vanagan film actress

காயமடைந்த லிண்டா ஜிதின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குநர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா படத்தில் இருந்த விலகி நிலையில் தற்போது துணை நடிகை தாக்கப்பட்டுள்ளதால் பாலாவுக்கு நேரம் சரியில்லை என்கின்றனர் இணையவாசிகள்.