மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் - பள்ளிக்குள் புகுந்து செருப்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம்..!
பள்ளி மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியரை உறவினர்கள் செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்
திருவள்ளூர் மாவட்டம் குருவராஜகண்டிகையில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவரைத் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்ததால் கூறப்படுகிறது.
இதனால் மாணவர் ஹரிஹரணின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிற்கும் அனுப்பி வைக்காமல் ஒத்தடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வீடடில் சொன்னால் பள்ளியை விட்டு நிறுத்தி விடுவதாக ஆசிரியர் தரப்பில் மாணவரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்ற மாணவனின் கை, கால்களில் வீக்கம் இருப்பதைக் கண்டு பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசிரியரை செருப்பால் தாக்கிய உறவினர்கள்
இது தொடர்பாக பள்ளிக்கு சென்ற மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் சென்றுள்ளார். அப்பொழுது ஆசிரியர் மாணவனை பிரம்பால் அடித்தது தெரியவந்த நிலையில்,
ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தற்காலிக ஆசிரியர் மோகன் பாபுவை சரமாரியாக செருப்பால் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து பள்ளியின் தற்காலிக ஆசிரியரை தாக்க வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்