கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல்; நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் - போலீசாருடன் தள்ளுமுள்ளு
ஆந்திராவில் கல்லுாரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுங்கச்சாவடி முற்றுகை
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுஙகச்சாவடியில் தமிழக மாணவர்களை, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், உள்ளூர் நபர்கள் சிலர் ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கினர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 75க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
அப்போது திடீரென சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கைது செய்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி டோல் கேட் ல் pic.twitter.com/x6QylYaQ6g
— Srinath Perumal (@thamizhsreee) October 25, 2022