சசிகலா புஷ்பா வீடு, கார் மீது தாக்குதல் - போலீசார் குவிப்பு... பதற்றம் அதிகரிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கார் மற்றும் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்
துாத்துக்குடி தபால்தந்தி நகர் காலாணியில் வசித்து வருபவர் சசிகலா புஷ்பா. இவர் பாஜகவின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில், கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சசிகலா புஷ்பா தனது காரி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரணம் என்ன?
பாஜவினர் இச்சம்பம் குறித்து தெரிவிக்கையில், துாத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி ஆகியோர கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா புஷ்பா, தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பறறி பேச தகுதி இல்லை.
மரியாதையாக பேச சொல்லி கொடுத்த பண்பு பாஜக, ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை என்றார். அமைச்சருக்கு மிரட்டல் அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியிருந்தார்.
அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆவேசமாக பேசிய சசிகலா புஷ்பா, நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என்றார்.