லண்டனில் இந்திய துாதரகம் மீது தாக்குதல் - பதிலடி கொடுத்த மத்திய அரசு
லண்டனில் இந்திய துாதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வணிக ரீதியிலான இருநாட்டு பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய துாதரகத்தின் மீது தாக்குதல்
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத முக்கிய நபராக கருதப்படும் அம்ரித் பால் என்பவரை கைது செய்ய காவல்துறையினர் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் இந்திய துாதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு இந்திய தனது கண்டனத்தை தெரிவித்தது.மேலும் இங்கிலாந்து துாதரக உயர் அதிகாரியை அழைத்து இந்திய தனது கண்டனத்தை பதிவு செய்தது.
இந்தியா மறைமுக எதிர்ப்பு
இங்கிலாந்து அரசு இந்திய துாதரக தாக்குதல் குறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது, இங்கிலாந்தில் இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.