மீனவர்கள் மீது தாக்குதல்; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது - விஜயகாந்த்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் கண்டனம்
அந்த அறிக்கையில்,’தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஏற்கனவே இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது நமது கடற்படையே (இந்திய கடற்படை) நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தை மாறி மாறி ஆளுகின்ற கட்சிகள் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
— Vijayakant (@iVijayakant) October 22, 2022