ஏடிஎம் பரிவர்த்தனை சேவை கட்டணம் இன்று முதல் உயர்வு - எவ்வுளவு தெரியுமா ?

atm withdraw 1stjan
By Irumporai Jan 01, 2022 04:10 AM GMT
Report

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாநகரங்களில் மூன்று முறையும் மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 முறையும் இலவச பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில் இன்று முதல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் பரிவர்த்தனை சேவை கட்டணம் இன்று முதல் உயர்வு - எவ்வுளவு தெரியுமா ? | Atm Withdrawal Bank From 1St Jan

இலவச பரிவர்த்தனைகளை தாண்டி மற்ற ஏடிஎம் மையங்களை பயன்படுத்தினால் இன்று முதல் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் மற்ற வங்கிகளும் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.