ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு

Technology
By DHUSHI Mar 29, 2025 05:15 AM GMT
Report

ATM-களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து பணம் எடுப்பவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டணம் உயர்வு விவரங்கள்

சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தடை? முக்கிய அறிவிப்பு!

சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தடை? முக்கிய அறிவிப்பு!

ATM மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் சேவைக்கான கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17 முதல் ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று, இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் மே 1ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.

ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு | Atm Transaction Fees Increase

ஒரே வங்கியில் ATM அட்டைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அப்படி இருப்பின், ஒரு வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் பணத்தை ATM மூலம் 5 தடவைகள் மாத்திரம் இலவசமாக பெற முடியும்.

39 மனைவிகள், 94 குழந்தைகள்; உலகிலேயே பெரிய குடும்பம் - அந்த இந்தியர் யார் தெரியுமா?

39 மனைவிகள், 94 குழந்தைகள்; உலகிலேயே பெரிய குடும்பம் - அந்த இந்தியர் யார் தெரியுமா?

மிகுதி சோதிப்பதற்கு கூட கட்டணமா?

அத்துடன், பிற வங்கி ATM- களில் மெட்ரோ நகரமாக இருந்தால் மாதம் 3 முறை கூடுதலாக இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு | Atm Transaction Fees Increase

மெட்ரோ நகரமல்லாத பிற பகுதிகளாக இருந்தால் மாதம் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இருப்பைச் சரிபார்ப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்டவைகளும் ஒரு பரிவர்த்தனையாக கொள்ளப்படுகிறது.

இதன்படி, பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.1 அதிகரிக்கப்பட்டு, ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக கட்டணம் உயரும் என்றும் தகவல் தெரிவிக்கிறது.   

ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு | Atm Transaction Fees Increase

உங்க மகளை கொன்று சூட்கேசில் வச்சுருக்கேன் - மாமியாருக்கு போன் செய்த மருமகன்!

உங்க மகளை கொன்று சூட்கேசில் வச்சுருக்கேன் - மாமியாருக்கு போன் செய்த மருமகன்!