செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - மர்மநபர்களுக்கு போலீசார் வலை
கரூரில் ,ஏ.டி.எம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் வங்கி ஏடிஎம்.ல் பணம் எடுப்பதுபோல் உள்ளே சென்றுஏ.டி.எம் இயந்திரத்தை கற்களால் உடைத்து பணம் எடுக்க முயற்சி செய்தனர்.
அப்போது, ஏ.டி.எம்.இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடிக்க துவங்கியது. இதனால் அலறியடித்து கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஏ.டி.எம் இயந்திரத்தில் சத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்து. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு தாலுகா போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட பிறகு, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்ததும், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என தெரிவித்தனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றிபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்களால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.