ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை - ஒருவர் கைது
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.
கொள்ளையடித்து அந்த ஏடிஎம்-ஐ எரித்து விட்டு, மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளிலும் சிக்காத வண்ணம் தப்பித்து விட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
இதில் ஹரியானா, கர்நாடகா மாநிலங்களுக்கு கொள்ளையர்களை தேடி காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர். மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
ஒருவர் கைது
இறுதியில் தொலைபேசி உரையாடல்களை கொண்டு அறைந்து ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் எனப்வரை பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் விடுதியில் தங்கி கொள்ளைக்கு திட்டமிட்டது தெரியவந்துள்ளது. தற்போது விடுதி மேலாளரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஆரிப் உடன் சம்பந்தப்பட்ட அந்த கொள்ளை கும்பல் நபர்கள் குறித்த விசாரணையையும் காவல்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.